தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். விஜய் வரும் இடங்களில் அவரைப் பார்ப்பதற்காகத் தொண்டர்கள் மரங்கள் மற்றும் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் ஏறுவதைத் தவிர்க்க, காவல்துறையினர் மற்றும் மின்வாரியம் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக மின் மாற்றிகள், மின் கம்பங்கள் மற்றும் சாலையோரங்களில் தகர ஷீட்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காகக் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் வெயிலுக்கு மத்தியில் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்படுகிறது.