சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில், இன்று மாலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசினார். முதல்வரின் சகோதரரும், நடிகருமான மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “நான் பசியால் மயங்கிய போது, எனது உடல்நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அது மனித நேயம். கொள்கை முரண்பாடு ஒரு பக்கம் இருக்கலாம், ஆனால் மனித பாசம் என்பது வேறு.” எனக் கூறினார். மேலும், பெருந்தலைவர் காமராஜரின் மறைவிற்கு அறிஞர் அண்ணா மிகவும் அழுததாகவும், அமெரிக்க அதிபர் நிக்சனை சந்திக்க மறுத்த அண்ணாவின் நடவடிக்கையையும் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த உரையில் சீமான் கூறிய வரலாற்று தகவல் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அறிஞர் அண்ணா 1969 ஆம் ஆண்டில் மரணமடைந்தார், ஆனால் காமராஜர் 1975 ஆம் ஆண்டில் மரணமடைந்தார். அப்படி இருக்க , “அண்ணா காமராஜருக்காக எப்படி அழுதார்?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
