மகாத்மா காந்தியின் பிறந்தநாள் எப்போது என்ற ஆசிரியரின் கேள்விக்கு மாணவர் ஒருவர் அளித்த வினோதமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக இத்தகைய கேள்விகளுக்கு “அக்டோபர் 2” என்றுதான் அனைவரும் பதிலளிப்பார்கள்.

ஆனால், இந்த மாணவன் வரலாற்று அறிவை விட தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, காந்தியடிகள் எப்போது பிறந்தார் என்பதற்கு மிக யதார்த்தமான, அதேசமயம் யாராலும் மறுக்க முடியாத ஒரு பதிலை அளித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த மாணவனின் சமயோசித புத்தியைப் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by 𝗦𝘄𝗲𝗲𝘁𝘆 ❤️‍🩹 (@sweety_edittz)

“>

இந்நிலையில் “கேள்விக்குத் தவறான பதில் என்றாலும், தர்க்கரீதியாக இது உண்மைதான்” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆசிரியரையே ஒரு நிமிடம் திகைக்க வைத்து, பின் சிரிக்க வைத்த இந்தத் தக் பதில், இணையத்தில் தற்போது செம ட்ரெண்டிங்கில் உள்ளது.