ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக இனிப்பு கொடுக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில், கேரளாவைச் சேர்ந்த ஒரு பில்டர்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தங்களோடு நீண்ட காலம் பயணித்த 47 ஊழியர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை பரிசாக வழங்கி அதிரடி காட்டியுள்ளனர். அதுவும் ஏதோ சாதாரண கார்கள் இல்லை, பலரும் கனவு காணும் ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் (Defender) போன்ற பிரீமியம் ரக கார்களை வாரி வழங்கியுள்ளனர்.

​தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த ஊழியர்களைக் கௌரவிக்கவே இந்த மிகப்பெரிய சர்ப்ரைஸை வழங்கியதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், “நமக்கெல்லாம் இப்படி ஒரு முதலாளி அமையமாட்டாரா?” என நெட்டிசன்கள் ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். கேரள பில்டர்ஸின் இந்த ‘மாஸ்’ செயல், தற்பொழுது கார்ப்பரேட் உலகில் ஒரு மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.