தற்கொலை குறித்து முன்கூட்டியே இடம் மற்றும் தகவல்களைக் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு, குருகிராமில் 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், தான் ஏன் இந்த முடிவை எடுக்கிறேன் என்பது குறித்தும், தனது உடல் எங்கே இருக்கும் என்பது குறித்தும் துல்லியமாக விவரித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அதே குளத்திலிருந்து மாணவனின் உடலை மீட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவனின் இந்தத் தீவிர முடிவிற்கான பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் மனநலப் பாதிப்புகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தற்கொலை எண்ணம் என்பது ஒரு தீர்வல்ல என்பதை வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள், இது போன்ற இக்கட்டான சூழலில் இருப்பவர்கள் உடனடியாக தகுந்த ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுவது அவசியம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்
