ஹைதராபாத்தில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தீபிகா என்பவர், அலுவலகத்தில் மன அமைதியைக் காக்கவும், தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்க்கவும் தான் மேற்கொண்ட சில மாற்றங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

எப்போதும் வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும் அல்லது எல்லா நேரமும் பதிலளிக்க வேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தனது எல்லைகளைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, குறுஞ்செய்திகளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதைத் தவிர்ப்பது, கையில் இருக்கும் வேலைகளைப் பொறுத்து புதிய பணிகளை ஏற்பது, தேவையற்ற விளக்கங்களைக் கொடுத்து நேரத்தை வீணடிக்காமல் இருப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வேலை முடிந்ததும் கணினியை மூடிவிட்டு மனதளவிலும் வேலையிலிருந்து விலகி இருப்பதும், மற்றவர்களின் வளர்ச்சிப் பாதையுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் தனது தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதும் தனது மன அழுத்தத்தைக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Deepika (@deepika.not.padukone)

“>

வேலையில் தெளிவின்மை இருந்தால் அதைத் தயங்காமல் கேட்டுத் தெரிந்துகொள்வது தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க உதவுகிறது. “இந்த எல்லைகளை வகுப்பது வேலையைக் குறைப்பதற்காக அல்ல, மன அமைதியுடன் திறமையாகச் செயல்படுவதற்காகவே” என்று அவர் கூறியிருப்பது, அலுவலகச் சூழலில் மன அழுத்தத்தால் தவிக்கும் பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.