“காதலிக்கும் போது உம்மா.. பிரியும் போது பணமா?!” — சீனாவில் தற்போது காதலர்கள் பிரிந்து செல்லும் போது, காதலன் தனது காதலிக்கு ‘பிரிவு கட்டணம்’ (Breakup Fee) என்ற பெயரில் தொகையை செட்டில் செய்யும் விசித்திரமான மற்றும் சர்ச்சைக்குரிய கலாச்சாரம் சோஷியல் மீடியாவை அதிரவைத்துள்ளது!
நீண்டகாலமாக உறவில் இருந்துவிட்டு திடீரென பிரியும் போது, அந்த உறவிற்காக காதலி செலவிட்ட விலைமதிப்பற்ற நேரம், உணர்வுகள் மற்றும் பொருளாதார முதலீடுகளுக்கு ‘நஷ்டஈடு’ தரும் விதமாக இந்தத் தொகை கணக்குப்பார்த்து நிர்ணயிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் ஏமாற்றமடைந்த பெண்களின் உணர்ச்சிகரமான காயங்களுக்கு தற்காலிகப் பொருளாதார மருந்தாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் புனிதமான காதலை ஒரு பக்கா கமர்ஷியல் பிசினஸாக மாற்றும் ஆபத்தான முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் இப்போதே கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
“மன உளைச்சலை ஈடுசெய்யப் பணம் ஒருபோதும் தீர்வாகாது, இது உறவுகளில் இருக்க வேண்டிய பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையை விட, பொருளியல் ரீதியான கணக்குகளுக்கே முன்னுரிமை அளிக்க வழிவகுக்கும்” என்று ஒரு தரப்பினர் வாதிட்டாலும், இன்றைய இளைய தலைமுறையினரிடையே இந்த ‘பிரேக்கப் ஃபீ’ ட்ரெண்ட் காட்டுத்தீயாய் பரவி உலக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது!
