ஜப்பானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறைக்காக காதலி வாடகைக்கு கிடைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது இளைஞர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலி மட்டுமல்ல அந்நாட்டில் மனைவியையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியவந்துள்ளது. திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவர்கள் வாடகைக்கு மனைவிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு வாடகைக்கு எடுக்கும் மனைவிகளை ஏஜென்சிகள் கண்காணித்து வருவார்கள். இது தம்பதிகளிடையே எந்த வன்முறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான். வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வது, உங்கள் சுக துக்கங்களை கேட்டு ஆறுதல் கூறுவது என பணத்திற்கு ஏற்ப வாடகைக்கு மனைவியை எடுத்துக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.