கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் சோனா எல்டோஸ். இவர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். கடந்து சில ஆண்டுகளாக சோனா ரமீஸ் என்ற இஸ்லாமிய வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

சமீப காலமாக காதலரும் அவரது குடும்பத்தினரும் சோனாவை இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் அவர் மன உளைச்சலில் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக சோனா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் காதலன் ரமீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மதம் மாற என்னை வற்புறுத்தினார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர் என எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சோனாவின் தாய் பிந்து கூறியதாவது ரமீஸின் குடும்பத்தினர் முதலில் எங்களிடம் வந்து திருமணம் குறித்து பேசினார்கள். சோனா இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். ரமீஸ் மீதான காதல் காரணமாக முதலில் சோனா ஒப்புக்கொண்டார்.

ஆனால் ரமீஸ் ஒரு கடத்தல் வழக்கில் சிக்கியது தெரியவந்தது. இதனால் சோனா மதம் மாற மறுத்து தெரிவித்தார் இருப்பினும் ரமீஸை உண்மையாக காதலித்ததால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தார்.

ஒருநாள் ரமீஸ் சோனாவை வீட்டில் இருக்கும் அறையில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி மதம் மாற கட்டாயப்படுத்தியுள்ளார் என அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.