கர்நாடகாவில் 2024-25 நிதியாண்டில் ரூ.39,577 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக மொத்தம் 1,254 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில் ரூ.7,202 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2024-25-இல் வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், 2022-23 நிதியாண்டில் ரூ.25,839 கோடி மதிப்பிலான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்ததாகவும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வரி ஏய்ப்பு அளவு உயர்ந்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.