மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில், ஓபிசி மகாசபா மாநில பொதுச் செயலாளர் பப்பு கன்னோஜியா தொடர்பான அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தனது காதலியுடன் பிளாட்டில் இருந்த பப்புவை, மனைவி வந்தனா கன்னோஜியா கையும் களவுமாகப் பிடித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
போலீஸ் தகவலின்படி, சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் பிச்சியா பகுதியில் உள்ள பிரதமர் ஆவாஸ் யோஜனா குடியிருப்பில் நடந்தது. மூன்றாவது மாடியில் காதலியுடன் இருந்த பப்புவிடம், இதுகுறித்த தகவல் கிடைத்த மனைவி மகனுடன் வந்து சண்டையைத் தொடங்கினார். அப்போது பப்பு, வடிகால் குழாய் வழியாக கீழே இறங்கி தப்பியோடினார். ஆனால் காதலி அங்கேயே சிக்க, வந்தனா அவளை உதைகளாலும் செருப்பாலும் தாக்கினார். இதனால் காதலிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
View this post on Instagram
“>
சலசலப்பை பார்த்து மக்கள் கூட்டம் கூட, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். காயமடைந்த காதலியை மீட்டு மருத்துவ உதவி அளித்தனர். பின்னர் வந்தனா, தனது கணவர் தன்னை மற்றும் குழந்தைகளை கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் குற்றம் சாட்டினார். உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரினார். தற்போது இரு தரப்பினருக்கும் அமைதியை பேண அறிவுறுத்திய காவல்துறை, விசாரணைக்குப் பிறகு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
