கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23), கேரளாவில் தேன் உற்பத்தி தொழில் செய்து வந்தார். ஈஸ்டர் பண்டிகைக்காகச் சொந்த ஊர் திரும்பிய அபி, கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாகப் பேசாமல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தனது அறைக்குச் சென்ற அவர், மறுநாள் காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் திறந்து பார்த்தபோது, அபி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பேச்சிப்பாறை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அபி ஒரு பெண்ணைக் காதலித்து வந்தது தெரியவந்தது. சமீபகாலமாக அவரது காதலி அவருடன் பேசுவதை திடீரென நிறுத்தியதால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.