சிங்கம் காட்டுக்கு ராஜா என்று அழைக்கப்படுவது அதன் கம்பீரத்தினால் தான், ஆனால் சில நேரங்களில் இந்த ராஜாவே உயிருக்குப் பயந்து ஓட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆக்ரோஷமான நீர்யானை ஒன்று மூன்று சிங்கங்களை மிரட்டி விரட்டுவதைக் காண முடிகிறது.

ஒரு ஆற்றைக் கடக்க முயன்ற மூன்று சிங்கங்களை கண்ட நீர்யானை, தனது எல்லைக்குள் அவை நுழைந்ததால் கோபமடைந்து வேகமாகத் தாக்கியது. நீர்யானையின் ஆக்ரோஷத்தைக் கண்ட ஒரு சிங்கம் உடனடியாக பின்வாங்கியது, மற்ற இரண்டு சிங்கங்களும் அந்த ராட்சத விலங்கிடம் சிக்காமல் தப்பிக்க போராடி கரையேறின.எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, நீர்யானைகளின் பலத்தையும் அவை தங்கள் எல்லைகளைப் பாதுகாப்பதில் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதையும் காட்டுகிறது.
<a href=”http://

“>
நீர்யானைகள் நிலத்தில் மணிக்கு 30-50 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை, அதேபோல் தண்ணீருக்குள் அவை சிங்கங்களை விட வேகமாக நகரக்கூடியவை என்பதால் காட்டின் ராஜாவாக இருந்தாலும் நீர்யானையிடம் சிங்கங்கள் மோதத் தயங்குகின்றன. உருவத்தில் அமைதியாகத் தெரிந்தாலும், முதலையையும் சிங்கத்தையும் கூடத் தாக்கும் அளவுக்கு நீர்யானைகள் மிகவும் ஆபத்தானவை என்பதை இந்த ஒரு நிமிடம் 18 வினாடி வீடியோ தெளிவாக விளக்குகிறது.