பாகிஸ்தானுக்குத் தீர்த்த யாத்திரை சென்றபோது காணாமல் போன இந்திய சீக்கியப் பெண் சரப்ஜித் கவுரின் விவகாரம், தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆடியோ கிளிப்பால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் கபூர்தலாவைச் சேர்ந்த 48 வயதான சரப்ஜித், கடந்த ஆண்டு குரு நானக் ஜெயந்தி விழாவிற்காக பாகிஸ்தான் சென்றவர், அங்கேயே தங்கி நசீர் உசேன் என்பவரைத் திருமணம் செய்து மதம் மாறினார்.
<a href=”http://
“Only Girls Allowed” Pani Puri Stall Sparks Buzz Online Pani Puri Stall Goes Viral After
‘Boys Not Allowed’ Sign Creates Stir
pic.twitter.com/AWaoimI5BP— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 11, 2025
“>
தான் விரும்பித்தான் அங்கு தங்கியதாக ஆரம்பத்தில் அவர் கூறினாலும், தற்போது சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோவில், தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், தனதுகுழந்தைகளைப் பார்க்க இந்தியா திரும்ப விரும்புவதாகவும் அவர் கதறி அழுதுள்ளார்.
தான் ஒற்றர் இல்லை என்றும், சில தனிப்பட்ட புகைப்படங்களை அழிப்பதற்காகவே நசீர் உசேனை சந்திக்க வந்ததாகவும் அவர் அந்தப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது சரப்ஜித் கவுர் லாகூரில் உள்ள ஒரு அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார், அவருடைய கணவர் நசீர் உசேன் போலீஸ் காவலில் உள்ளார்.
அவர் ஒரு இந்திய உளவாளியாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விசா விதிமீறல்கள் தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக எல்லை மூடப்பட்டதால் அவரைத் திருப்பி அனுப்பும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது நிலவும் சட்டப் போராட்டங்கள் மற்றும் உளவுப் புகார்களுக்கு இடையே சரப்ஜித்தின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
