விசாகப்பட்டினம் மாவட்டப் பெண்கள் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27, 2026 அன்று அனைவரையும் உறைய வைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியது. அக்கையபாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், ஒரு சிவில் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சத்தியநாராயண மூர்த்தி என்பவரிடம் பெரும் தொகையைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வழக்கறிஞர் வழக்கைச் சரியாக நடத்தாமல் அந்தப் பெண்ணை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
A Worrying Scene in Visakhapatnam Court 😑
This woman named Lakshmi from Akkayyapalem entered the District Women’s Court in Visakhapatnam on April 27, 2026.
She stood before the judge in deep anger and pain, she pulled out a blade and threatened to harm herself in the courtroom… pic.twitter.com/9rkAAshhKf
— Aparajite (@amshilparaghu) April 29, 2026
இதனால் கடும் ஆத்திரமும் மனவேதனையும் அடைந்த லட்சுமி, நீதிபதி முன்பே தனது கையில் வைத்திருந்த பிளேடை எடுத்துத் தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். வழக்கறிஞர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூச்சலிட்ட அந்தப் பெண்ணால் நீதிமன்றமே சிறிது நேரம் ஸ்தம்பித்தது. அங்கிருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நீதி கிடைக்க வேண்டிய இடத்திலேயே ஒரு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
