இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘டீலக்ஸ் பையாஜி’ என்ற பெயரில் பிரபலமான இளைஞர் ஒருவர், ஒரு நாள் வாடகையாக ரூ. 1 லட்சம் கொடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காரை எடுத்து, அதில் ‘லக்ஸரி டீ’ விற்று அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
சாலையோர டீயை உலகின் மிக விலையுயர்ந்த சொகுசு காரில் வைத்து விற்றால் மக்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதைச் சோதித்துப் பார்க்கவே அவர் இந்த வினோதமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளார்.
குங்குமப்பூ கலந்த ஒரு கப் டீயுடன், அந்த விலை உயர்ந்த காரில் அமர்ந்து சிறிது தூரம் பயணம் செய்ய 300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, இதுவரை 23 மில்லியன் பார்வைகளைக் கடந்து உலகளவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
“>
இந்த நூதன முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த போதிலும், பொருளாதார ரீதியாக இது அந்த இளைஞருக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளது. கார் வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக அவர் மொத்தம் 1.08 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில், டீ விற்றதன் மூலம் அவருக்கு 88,400 ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்துள்ளது.
இதன் மூலம் அவருக்குச் சுமார் 20,000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும், “பணம் முக்கியமல்ல, அந்த இடத்திற்கு வந்த மக்களின் முகத்தில் பார்த்த மகிழ்ச்சியே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நஷ்டம் அடைந்தாலும் தனித்துவமான ஐடியா மூலம் இணையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த ‘லக்ஸரி டீ’ விற்பனையாளரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
