காசியில் நடைபெற உள்ள தமிழ் சங்கமும் நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை தமிழ் சங்கமும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை, குமரி மற்றும் கோவையிலிருந்து இரண்டு மார்க்கங்களிலும் காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் டிசம்பர் 17ஆம் தேதி காலை 4.30 மணிக்கு காசிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.