நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் ஆளும்கட்சியான திமுகவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு மற்றும் சரிவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “காங்கிரஸ் எவ்வளவு பெரிய துரோகப் பய என்பது இப்பதான் திமுகவுக்குத் நல்லா உறைக்கும்.
அற்பமான பதவிகளுக்காகவும், சுயநலத்திற்காகவும் என் சொந்த தொப்புள்கொடி இனத்தையே கொன்று குவித்தபோது வேடிக்கை பார்த்த துரோகக் கூட்டணி அது” என்று பழைய வரலாற்றுப் பக்கங்களை நினைவூட்டி காங்கிரஸ் மீது தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் திமுகவின் வீழ்ச்சி குறித்துப் பேசிய சீமான், “இந்தத் தேர்தலின் மூலம் காங்கிரஸ் கூட்டணியால் திமுகவுக்கு நிகழ்ந்துள்ள இந்தத் தோல்வியும் அவமானமும் எனக்குப் பெரும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தான் தருகிறது. காங்கிரஸ் என்கிற செத்த பிணத்தைத் தூக்கித் தோளில் சுமந்து, அதற்குத் தேவையில்லாமல் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் நடக்கும்.
இல்லை என்றால், பத்து ஆண்டுகளுக்கு முன்பே அண்ணன் இவர்களைப் புதைத்து மாற்று அரசியலை விதைத்திருப்பேன். ‘போதிக்கும் போது யாருக்கும் எதுவும் புரியாது, சொந்தமாகப் பாதிக்கும் போதுதான் அத்தனையும் புரியும்’ என்பது இவர்களுக்கு இப்போது நன்றாகப் புரிந்திருக்கும்” என்று திமுக – காங்கிரஸ் கூட்டணியை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.
