அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தான் அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாகத் தனது கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக இபிஎஸ் தரப்பு தன்னை வெளியேற்றியதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

​எடப்பாடி பழனிசாமியால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என அவர் உருக்கமாகப் பேசினார். முன்னதாக, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஓபிஎஸ்-ஸை கட்சியை விட்டு இபிஎஸ் நீக்கியது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு நெருங்கும் வேளையில், ஓபிஎஸ்-ஸின் இந்த எமோஷனல் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.