காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அமைச்சர் டி.கே.பிரபு திடீரென நடத்திய அதிரடி ஆய்வு, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து நேரில் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள சுகாதார சீர்கேடுகள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறைபாடாக இருப்பதை கண்டு கடும் அதிருப்தி அடைந்தார். குறிப்பாக, கழிவறைகள் மிக மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஸ்பாட்டிலேயே டோஸ் விட்டார்.
என்ன இப்படி இருக்கு..? காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு.. கழிவறையை சரியாக பராமரிக்கவும் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவு..#Karaikudi | #MinisterTKPrabhu | #TVK | #BusStand | #PolimerNews pic.twitter.com/9ZbfZM02kp
— Polimer News (@polimernews) May 16, 2026
பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் டி.கே.பிரபு, காரைக்குடி மாநகராட்சி ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். பேருந்து நிலைய கழிவறைகளை தினசரி முறையாக தூய்மைப்படுத்தி பராமரிக்கவும், கோடை காலத்தை கருத்தில் கொண்டு பயணிகளுக்கு தடையின்றி சுத்தமான குடிநீர் வசதியை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்தி தரவும் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ஆக்சன் காரைக்குடி ஏரியாவில் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
