கேரள மாநிலத்தை சேர்ந்த அபினவ் (19) என்ற என்ஜினீயரிங் மாணவர், ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். அந்தப் பெண்ணைத் தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அந்த இளம்பெண் கர்ப்பமானார். விஷயத்தை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அபினவ் வீட்டாரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், அபினவ் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்குத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அபினவ்வை கைது செய்து சிறையில் அடைத்தனர்.