பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தனது மகள்களின் ஆடம்பரத் திருமணத்திற்காகப் பணம் சேமிப்பதற்குப் பதிலாக, கடந்த 35 ஆண்டுகளாக அவர்களின் கல்வி மற்றும் சுயசார்புக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நெகிழ்ச்சியான கதை இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த உருக்கமான பதிவு, பெண் பிள்ளைகளை வளர்க்கும் சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஒரு பெற்றோரின் உண்மையான சொத்து என்பது சேர்த்து வைக்கும் பணமோ பொருளோ அல்ல, மாறாகத் தன் பிள்ளைகளைச் சுயசிந்தனையுடனும், யாருடைய உதவியுமின்றித் தனித்து வாழும் சுதந்திரத்துடனும் வளர்ப்பதுதான் என்பதை இவரது அர்ப்பணிப்பு உணர்வு உணர்த்துகிறது.

“>

இதனால் தன் மகள் தாயான பிறகு தனது பணியைத் தொடர்வதா வேண்டாமா என்று தயங்கியபோது, “வேலையை நிறுத்த வேண்டாம், குழந்தையை வளர்க்க நாங்கள் உதவுகிறோம்” என்று தைரியம் தந்து, பேரக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தன் மனைவியையும் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த தந்தை. அதே நேரத்தில், அவர் தனது சொந்த ஊரில் தனியாக வசித்துக்கொண்டு, சமையல் மற்றும் வீட்டு வேலைகளைத் தானே செய்வதுடன், மளிகைக் கடையை நடத்துவது, விவசாயத்தைக் கவனிப்பது மற்றும் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுவது எனத் தற்போதும் தன் அன்றாட வாழ்க்கையை அயராது சுழன்று கவனித்து வருகிறார்.

இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் தரும் மிகச்சிறந்த பரிசு அவர்களின் கல்விசார் சுதந்திரமும், அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஒரு தூணாய் உறுதுணையாக நிற்பதும்தான் என்ற மகளின் உருக்கமான நன்றியுரை, சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானோரை நெகிழச் செய்து, இந்தத் தந்தைக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.