மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக இதுவரை 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்காக முக்கிய சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், உள்ளாட்சிப் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது; அவர்கள் வெறும் பயனாளிகளாக இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளாக மாறி, மனுக்களைப் பெறுவார்கள் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த அதிகாரம் அளிக்கும் சட்டத்தை மற்ற மாநிலங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர்,மாற்றுத்திறனாளிகள் எந்த நிலையிலும் சோர்வடைந்து விடக்கூடாது. பிற்போக்குவாதிகளின் குரலை காதில் வாங்கி கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும். கருணாநிதிக்கு ஒரு விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனது. ஆனாலும் விடாமல் உழைத்தார். சக்கர நாற்காலியில் இருந்தபோது கூட சுற்றிச்சுழன்று உழைத்தார். அந்த வில் பவர் உங்களுக்கும் இருக்க வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.