கரூர் கூட்ட நெரிசல் பேரிழப்பைத் தொடர்ந்து, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது X தளத்தில் அவர், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி, கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி காவல்துறை ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக மாறினால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இலங்கை, நேபாளத்தில் Gen-Z தலைமுறை எழுச்சி கண்டது போல இங்கும் நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கும் அரச பயங்கரவாதத்திற்கு முடிவுரையாக இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது எனக் கூறி, பல தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. சர்ச்சை அதிகரித்ததைத் தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா தனது பதிவை நீக்கியிருந்தாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், கரூர் சம்பவம் சூழ்ந்துள்ள பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.
