கரூர் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயரச் சம்பவத்துக்குப் பிறகு தவெக தலைவர் விஜய், செய்தியாளர்களிடம் எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்னை திரும்பினார். பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
எனினும், சமூக வலைதளங்களில் விஜய் மீது விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
— Sanjeev (@SanjeeveVenkat) September 29, 2025
“>
இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் ‘ஐ ஸ்டான்ட் வித் விஜய்’ என பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, நடிகரும் விஜயின் நண்பருமான சஞ்சீவ் தனது எக்ஸ் பக்கத்தில் விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து, “உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்தது போதே நீ சிங்கம் தான்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, விஜய்க்கு ஆதரவாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
