கரூரில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் நடைபெற்ற அரசியல் பேரணியில் ஏற்பட்ட துயரமான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர். இதில் 10 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த பேரணிக்கு தொடக்கத்தில் போலீசாரால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட ஏராளமானோர் கூட்டமாக திரண்டனர்.  அதன்பிறகு ஏற்பட்ட கூட்ட செரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்தனர். அதன்பிறகு நெரிசலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சமூக ஊடகங்களில் பரவும் ஒரு வீடியோவில், தனது உயிரிழந்த இளம் குழந்தையின் உடலை தோளில் சுமந்தவாறு ஒரு தந்தை மருத்துவமனையில் உதவிக்காக கதறி அழும் காட்சி மக்கள் மனங்களை உலுக்கியுள்ளது.

மேலும் அவர் குழந்தையின் உடலை தூக்கிக்கொண்டே அழுத நிலையில் உடனடியாக செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும் கரூர் சம்பவத்தில் ஏராளமானோர் தங்கள் சொந்தங்களை இழந்து தவிக்கும் நிலையில் பலர் பெற்ற குழந்தைகளை இழந்து கதறி துடிப்பது வேதனையை ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு சார்பில் 10 லட்சம் நிவாரணமும், நடிகர் விஜய் உயிர் இழந்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமும் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.