தமிழக முழுவதும் இன்று காலை முதல் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக பத்திரப்பதிவுத்துறை சர்வர் சரியாக வேலை செய்யாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று காலை முதலே தமிழக பதிவுத்துறை இணையதளம் சரியாக செயல்படாததாக தகவல் வெளியான நிலையில் தற்போது முற்றிலும் முடங்கியுள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் டோக்கன் பெற்ற மக்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும் பத்திர பதிவுத்துறை இணையதளம் முடங்கியதால் தமிழ்நாடு அரசுக்கு 300 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
