தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜயின் பாதுகாவலர்களிடம் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பாக அறிக்கை கேட்டதாக தகவல் வெளிவந்தது.
ஏற்கனவே நடிகர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது பாதுகாப்பை அதிகரிக்க Z பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்தது.
ஆனால் இதனை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது வெளிவந்த அறிக்கையில் புலனாய்வு அமைப்புகளின் தகவலின் அடிப்படையில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த பாதுகாப்பில் எந்தவதமான மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
