தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பெண்கள் குழந்தைகள் என 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தது.

அதன் பிறகு அவரது பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மூன் ஜாமீன் மனுக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் என்பவர் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தங்களுடைய வாதங்களை யாருமே நீதிமன்றத்தில் முன்வைக்க முடியாத நிலையில் தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தை நடத்தி முடித்துள்ளது என்ற பதிவிட்டு இருந்தார்.

இதன் காரணமாக உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி சைபர் கிரைம் போலீசார் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அதிரடியாக தற்போது கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே கரூர் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பக் கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.