சமீபத்தில் பேருந்து ஓட்டுனர் பணியை துறந்த கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், ஷர்மிளாவிடம் பேசிய கமல்ஹாசன் , “ஷர்மிளா ஒரு ஓட்டுனராக மட்டுமே இருந்து விட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை” என கூறியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசளித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், செய்தியாளரை சந்தித்த ஷர்மிளாவின் தந்தை, கமல்ஹாசன் கார் கொடுக்கவில்லை, கார் வாங்க அட்வான்ஸ் பணம் கொடுத்ததாக கூறினார்.