கன்னி ராசி அன்பர்களே…

இன்று தன வரவு உங்களுக்கு சீராக வந்து கொண்டிருக்கும். சுப விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். நல்லது கெட்டதுகளில் பங்கு கொள்வீர்கள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பொது வாழ்க்கையில் உங்களுக்கு புகழ் கூடும் என்று சொல்லலாம்.

இன்று  குடும்பத்தில் ஒற்றுமை கண்டிப்பாக அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடத்திலும் நீங்கள் பேசி பழக வேண்டும். அனுசரித்தும் செல்ல வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். அன்பாக பேசுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

இன்று வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனமாக இருக்க வேண்டும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அற்புதமாக காய் நகர்த்தி  வெற்றி பெறுவீர்கள். பெண்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் கோபப்பட வேண்டாம்.

இன்று தொட்ட குறை விட்ட குறையை சரி செய்து விட முடியும். கோவில் குளங்களுக்கு சென்று வர முடியும். இன்று மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டுத்துறையில் சாதிக்க முடியும். கல்வித்துறையிலும் சாதிக்க முடியும். நன்கு முயற்சி பண்ணுங்கள். கெட்ட சகவாசங்களை விட்டுவிட பாருங்கள். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள். கோபமான பேச்சு வேண்டாம் முக்கியமாக தாய் தந்தையரிடம் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவன் பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 2, 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.