சிம்ம ராசி அன்பர்களே….

இன்று நட்பு ஒன்று பகையாக கூடும். பகை ஒன்று நட்பாக கூடும் என மாறி மாறி சில விஷயங்கள் நடக்கும். இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். ஆனாலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றி துடிப்புடன் செயல்படுவீர்கள். காலையில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் சோம்பேறித்தனமாக இருக்கும். உடல் ஒத்துழைப்பும் குறைவாகத்தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி தேவைப்படும் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. இன்று தொழில் ரீதியாக அலைச்சல்   கொஞ்சம் ஏற்பட்டாலும் ஆதாயத்திற்கெல்லாம் குறைவிருக்காது சீரான ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்கள் அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கிவிடும். நண்பரிடம் இருந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக மாறும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க வேண்டி இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலைகள் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பார்த்த வீடு மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் வீட்டு வேலைகளை அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு இன்று மனமகிழ்ச்சி பொங்கும் காரியங்கள் அற்புதமாக நடக்கும்.இன்று  பெண்கள்  மனதிற்கு பிடித்த வரை கரம் பிடிக்க முடியும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வரன்கள்  தேடிவரும். நல்ல வரன்களா என்பதை ஆராய்ந்து எந்த முடிவையும் எடுக்க வேண்டும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டாம். கண்டிப்பாக நீங்கள் எதையும் யோசித்து செயல்பட வேண்டும். சக மாணவர்களுடன் விளையாடும் போது கவனம் வேண்டும். எதார்த்தமாக செயல்படுங்கள் அது போதும். வேண்டாத செயல்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் .அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த பணியிலும் ஈடுபட்ட பாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்