கடக ராசி அன்பர்களே….

இன்று கருத்து வேற்றுமை கண்டிப்பாக மாறும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும். காலையில் சுறுசுறுப்பாக எழுந்திருங்கள். கடகம் ராசி நேயர்கள் இன்று வெளி உலகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். இன்று மறைமுக எதிர்ப்புகள் காணாமல் போகும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் விலகி செல்லக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

தகராறுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் இன்று நல்ல தீர்வு கிடைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் மிகவும் அக்கறையுடன் செயல்படுவீர்கள். அதே போன்று கடுமையான முயற்சிகளால் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். மனதிற்குள் உற்சாகம் பிறக்கும் புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.இன்று   பெண்களுக்கு இனம் புரியாத குழப்பம் ஏற்பட்டு சரியாகும். காலையில் என்ன சமையல் செய்வது என்று குழப்பம் இருக்கும்.

பிள்ளைகளிடம் கோபப்பட வேண்டாம். பிள்ளைகளை விட்டு பிடிக்க பாருங்கள். இன்று எதையும் யோசித்து செயலாற்றுவது நல்லது. குழப்பம் ஏற்படுத்தாத பணியில் ஈடுபடுங்கள். இன்று மாணவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். முன்கோபம் இருக்கக் கூடாது. சகமானவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். மொழி சம்பந்தப்பட்ட பாடல்களை கற்று தெரிந்து கொள்ள வேண்டும். மாணவ கண்மணிகள் காலையில் கொஞ்சம் சோம்பலாக காணப்படுவீர்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியுங்கள். இந்த இரண்டு நிறமும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்