கன்னி ராசி அன்பர்களே

இன்று எதிர்பாராத திசை திருப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் கண்டிப்பாக வெற்றியைக் கொடுக்கும். அனைவரிடத்திலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணி புரிவீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழும். தொலைந்து போன பொருள் கண்டிப்பாக கிடைக்கும். திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலையை புரிந்து கொண்டு முடிவு எடுப்பது நல்லது.

இன்று பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். பதட்டம் பயம் வேண்டாம். பெண்கள் எந்த காரியத்திலும் யோசித்து செயல்படுங்கள். சில குழப்பங்கள் வந்து செல்லும். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். வீண் அலைச்சலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடத்தை கவனமாக படிக்க வேண்டும். முன்னேற்றமான கல்வியை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  :  இரண்டு ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்  :  மஞ்சள் மற்றும் நீல நிறம்