துலாம் ராசி அன்பர்களே

இன்று முழு முயற்சியுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க கற்றுக் கொள்வீர்கள். அனைவருக்கும் பிடித்தமான நபராக இன்று காணப்படுவீர்கள். சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்படுவீர்கள். நினைத்தது நடக்கும். எண்ணற்ற ஏற்றங்கள் மாற்றங்கள் ஏற்படும்.

இன்று தன வரவு சீராக இருக்கும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நல்லது கெட்டது புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள். நேர்மை தவறாமல் செயல்படுவீர்கள். இன்று  தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறிக்கிடும். இன்று பெண்களுக்கு கணவன் மூலம் முன்னேற்றம் இருக்கும். எந்த குழப்பமும் வேண்டாம்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கல்வித் துறையில் அதிக ஆர்வம் இருக்கும். முயற்சி செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  மேற்கு

அதிஷ்ட எண் :  இரண்டு ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்  : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்