கன்னி ராசி அன்பர்களே,

இன்று காரியங்கள் அற்புதமாக கைகூடும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாளாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடக்கக்கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சொன்ன சொல்லை இன்று காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு வெளிப்படக்கூடும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வாக்கு திறமையால் ஆதாயம் ஏற்படக்கூடும். திறமைகள் கண்டிப்பாக வெளிப்படக்கூடும். சொந்த முயற்சியால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

இன்று உற்சாகமாக எதிலும் ஈடுபடுவீர்கள். விளையாட்டு துறையில் சாதிக்கும் அம்சம் உள்ளது. கலைத்துறையில் உங்களால் சாதிக்க முடியும். இன்று சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அனைவரிடமும் எதார்த்தமாக பழகுவீர்கள் .இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக கண்டிப்பாக அமையும் .  இன்று பெண்களுக்கு  சுயமரியாதை வெளிப்படக்கூடும் பெண்கள் இன்று ஆசைகளையும் கனவுகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வியியல் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இன்று கல்விக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் நாள் என்றே சொல்ல வேண்டும். இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை  : மேற்கு

அதிர்ஷ்ட எண்  : ஐந்து மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்   : பச்சை மற்றும் சிவப்பு நிறம்