சிம்ம ராசி அன்பர்களே,

இன்று கொஞ்சம் லாபகரமான நாளாக இருக்கக்கூடும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். இன்று வீடு மாற்றம் ஏற்பட க்கூடும். போட்டி போட்டு வெற்றி பெறும் சூழல் உள்ளது. மனதடுமாற்றத்தில் இருந்து விடுபடுவீர்கள். ஆதாயம் தரும் காரியம் ஒன்றில்  ஈடுபாடு செலுத்துவீர்கள் .இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழல் இருக்கும். தொழில் வியாபாரம் உங்களுக்கு கண்டிப்பாக நன்மையை கொடுக்கும்.

இன்று அலைச்சலை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த லாபம் தாமதப்பட்டாலும் வரக்கூடும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கக்கூடும் .நல்ல மனதிற்கு சொந்தக்காரராக காணப்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் கொஞ்சம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகரிக்கும். பெண்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

இன்று பெண்கள் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றியை தன் வசப்படுத்த முடியும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரக்கூடும். எதிர்பார்த்த பணம் கண்டிப்பாக கையில் வரக்கூடிய சூழல் உள்ளது. ஆனால் காலதாமதம் ஏற்படும். அதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை தெளிவாக அணுக வேண்டும்.

இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள முடியும். இன்று மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள இந்த நாள் நல்ல நாளாக அமையும். படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்   இன்றைய தினம் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு செயலிலும் ஈடுபடுங்கள் . உங்களுக்குஇன்று . வெற்றி நிச்சயம்

அதிர்ஷ்டமான திசை   :  தெற்கு

அதிஷ்ட எண் :  4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்  : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்