மதுரையை சேர்ந்த மேரி கொலாசிஸ்கா என்பவர் கடந்த 3 வருடங்களாக கேரளா கொல்லத்திலுள்ள கன்னியாஸ்திரி மடத்தில் சேவை செய்து வந்தார். இந்நிலையில் மேரி கொலாசிஸ்கா திடீரென மடத்தில் உள்ள பிராத்தனை கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக கன்னியாஸ்திரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மேரி கொலாசிஸ்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி கொலாசிஸ்காவை பார்க்க அவரது உறவினர்கள் வந்து சென்ற நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே உறவினர்களுக்கும் மேரி கொலாசிஸ்காவின் தற்கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மேரி கொலாசிஸ்கா தன் கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கன்னியாஸ்திரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
