பாலக்காட்டில் வசித்து வருபவர் தான் டாட்டூ கலைஞர் பிபின். இவருக்கும் 15 வயது சிறுமி ஒருவருக்கும் சோசியல் மீடியா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தன் புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிபின் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சோசியல் மீடியா மூலம் பலருக்கு அனுப்பி பணம் பெற்று வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பிபினை அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையில் பிபின் ஏற்கனவே சிறுமிகளை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டாட்டூ கலைஞர் சோசியல் மீடியாவில் சிறுமியின் ஆபாச புகைப்படத்தை பகிர்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
