பொதுவாக விவாகரத்து வழக்குகளில் மனைவி விருப்பப்பட்டால் கணவன்மார்கள் கண்டிப்பாக ஜீவனாம்சம்  வழங்க வேண்டும். இந்த பணத்தை மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் மனைவி விருப்பப்படி கணவன் வழங்க நேரிடும். இந்த நிலையில் விவாகரத்து வழக்கில் கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு கணவன் மனைவி மாதம் 12,000 ரூபாய் சம்பாதிப்பதாகவும் ஆனால் தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும் மனு தாக்கல் செய்ததோடு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது கணவனின் தார்மீக பொறுப்பு. கணவனுக்கு வருமானம் இல்லாவிடிலும் மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்குவது சமூக, சட்டம் மற்றும் தார்மீக பொறுப்பு என கூறியது. மேலும் கணவனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் மாதம் 4000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.