ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சீமாகுர்தியைச் சேர்ந்த விவசாயி துமதி ஸ்ரீனிவாச ராவ், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கத் தனது டிராக்டரில் அதிரடி மாற்றம் ஒன்றைச் செய்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலிலும் சௌகரியமாக விவசாய வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, சுமார் 2,45,000 ரூபாய் செலவழித்துத் தனது டிராக்டரில் ஒரு ஏசி (குளிரூட்டப்பட்ட) கேபினைப் பொருத்தி அசத்தியுள்ளார்.
வெயிலை சமாளிக்க டிராக்டரில் ஏசி பொருத்திய விவசாயி pic.twitter.com/ebjTZisQWY
— BBC News Tamil (@bbctamil) May 20, 2026
இந்த நவீன டிராக்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் அது இயங்கும் விதம் குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் “விவசாயியின் மாஸ் மூவ்” என வியப்பில் ஆழ்த்தி வருகிறது!
