மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளை வலுப்படுத்த வாங்கப்பட்ட 40 புதிய பொலிரோ ஜீப் வாகனங்களைத் தொடங்கி வைக்க வந்த தமிழக முதல்வர் விஜய், வழக்கமான அரசியல்வாதிகளைப் போலக் கொடியசைத்து விட்டுச் செல்லாமல் அதிரடி காட்டியுள்ளார். கடைசியாகச் சாவியைப் பெற்றுக் கொண்ட டிரைவரிடம், “நான் இந்த ஜீப்பை இயக்கி பார்க்கலாமா?” என்று கேட்டு, அவரையே பக்கத்து சீட்டில் அமரவைத்துத் தலைமைச் செயலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்து அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

​இந்த மாஸ் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா இந்த வீடியோவைப் பகிர்ந்து, “எளிமையான உறுதியான பொலிரோதான் நான் ஓட்டுவதற்கு விரும்பும் கார்.. முதல்வர் ஓட்டுவதை பார்ப்பதிலும் மகிழ்ச்சி அளிக்கிறது” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆனந்த் மகிந்திரா விரைவில் முதல்வர் விஜய்யைச் சந்தித்துத் தமிழகத்தில் புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என அதிரடிக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்!