தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுகளில் எலிகள் சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரியும் அவலம் அரங்கேறியுள்ளது. நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், வார்டு வளாகத்திற்குள்ளும் எலிகள் ஓடியாடும் இந்த அதிர்ச்சிகரமான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் வார்டுகளில் எலிகள் சர்வ சாதாரணமாகச் சுற்றித் திரிகின்றன.
வீடியோ – வினோத்குமார் மாயவன்#Theni | #Hospital | #TNLocalNews pic.twitter.com/ugEC0Knmbk
— விகடன் (@vikatan) May 20, 2026
அரசு மருத்துவமனையின் இந்த மோசமான சுகாதார சீர்கேட்டைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்து தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன!
