டோக்கியோவில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நித்யா ராமச்சந்திரன் என்பவர் சாப்பிடச் சென்றிருந்த போது, அங்கு உலக அளவில் வியக்க வைக்கும் மாஸ் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. உணவக ஊழியர் ஒருவர் நித்யாவிடம் “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்க, அதற்கு அவர் “தமிழ்நாடு தெரியுமா?” எனக் கேட்டுள்ளார்.

​அடுத்த வினாடியே அந்த டோக்கியோ உணவக ஊழியர் சற்றும் தாமதிக்காமல், “ஆமா, எனக்குத் தெரியும்… விஜய் தளபதி!” என்று கூறி, விஜய் அவர்களின் ஐகானிக் போஸை (Iconic Pose) செய்து காட்டி அசத்தியுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் விஜய் அவர்கள் டோக்கியோ வரை எந்த அளவிற்குப் பிரபலமாக இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கலகலப்பான காணொளியைத் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தினர் சோசியல் மீடியாக்களில் பயங்கரமாக வைரலாக்கி மாஸ் காட்டி வருகின்றனர்