தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை என பழனிச்சாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம்.

ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக்கொள்ள பாஜக உடன் கூட்டணி வைத்து ,பாஜக தமிழகத்துக்கு பெரும் துரோகங்களுக்கு துணை நின்று அதற்கு லாலி பாடியவர் பழனிச்சாமி. இப்போது அதே பாஜகவின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷனில், கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் என முதல்வர் விமர்சித்துள்ளார்.