மதவாதத்தை பாஜக பரப்புவதால், திமுக கூட்டணியில் சேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் அரசியலை நான் வெறுத்தேன். ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்து அரசியலுக்கு வந்தேன். திமுக கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்சி (பாஜக) மக்களை மதத்தின் மூலம் பிளவுபடுத்துவதால், திமுக அணியில் இணைந்தேன்” என்றார்