பழம்பெரும் மூத்த நடிகை சரோஜாதேவி இன்று 85 வயதில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். கன்னட சினிமாவை சேர்ந்த நடிகை சரோஜாதேவி தமிழில் நடிகர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் ராணி என அழைக்கப்பட்ட நடன புயல் கண்ணழகி சரோஜாதேவி பத்மஸ்ரீ பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள நிலையில் மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் வென்றுள்ளார். கிட்டத்தட்ட தென்னிந்திய மொழி படங்களில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் விஜய் மற்றும் சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சரோஜாதேவி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவருடைய கண் தானமாக பெறப்பட்டுள்ளது. அவருடைய கண் 85 வயதிலும் நலமாக இருப்பதால் நாளை 2 குழந்தைங்களுக்கு அவருடைய கண் பொருத்தப்பட இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மறைந்த பிறகு அபிநய சரஸ்வதி சரோஜாதேவி தன்னுடைய கண் மூலமாக குழந்தைகள் ரூபத்தில் வாழ இருக்கிறார்..