புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காராமணி குப்பத்தை சேர்ந்தவர் சங்கரப்பிரியா என்ற சான்ரேச்சல் (25). இவர் பிரபல மாடல் அழகி ஆவார். இவர் தனது கருமை நிறத்தினை முன்னிலைப்படுத்தி மாடலிங் துறையில் மிக புகழ் பெற்றார். கடந்த 2020-21 ஆம் ஆண்டு மிஸ் பாண்டிச்சேரி பட்டத்தையும், 2019 ஆம் ஆண்டு மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு என்ற பட்டத்தையும் வென்றார்.
அதன் பின் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என்ற பட்டத்தையும் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் சான் ரேச்சல் பெற்றுள்ளார். மேலும் பல அழகிப் போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார். தற்போது அவர் புதுச்சேரியில் மாடலிங் பயிற்சி வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டில் அதிக எண்ணிக்கையிலான ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் உடனே வீட்டிலிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஜிம்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அங்கு சிகிச்சை பலனின்றி சான் ரேச்சல் நேற்று பரிதாபமாக உயிர் இழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, ரேச்சல் 50 உயர் அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
உடனே வீட்டில் உள்ளவர்கள் கடந்த ஜூன் 5ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரேச்சல் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவர் எழுதிய தற்கொலை குறிப்பு அவரது மரணத்திற்கு அவருடைய கணவரும், அவரது குடும்பத்தினருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை எனவும் பேஷன் ஷோ நடத்துவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் அதிக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்துகொள்ள போவதாக எழுதியிருந்தார். என கூறினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் மாடலிங் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
