காஷ்மீர் பள்ளத்தாக்கில் மகாராஜா ஹரி சிங்க் டோக்ரா படையை எதிர்த்து கடந்த 1931 ஆம் ஆண்டு காஷ்மீர் போராட்டக்காரர்கள் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதில் உயிரிழந்தவர்களின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 13ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளை காஷ்மீர் வரலாற்றில் முக்கிய நாளாக கருதப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி முதல்வர் உமர் அப்துல்லா உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார். அப்போது அவரை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும் உமர் அப்துல்லாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

முடிவில் காவல்துறையினர் உமர் அப்துல்லாவை பிடித்து இழுத்து தள்ளிவிட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோவை உமர் அப்துல்லா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

மேலும்”இது நான் உடல் ரீதியாக அனுபவித்த போராட்டம். நான் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை. எந்த சட்டத்தின் கீழ் அஞ்சலி செலுத்துவது தடுக்கப்படுகிறது என்பதை விளக்க வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வரான உமர் அப்துல்லாவை விட துணைநிலை ஆளுநர் அதிகாரம் மிக்கவர் அவரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் காவல்துறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.