பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடனமாடியுள்ளார். இவர் ஹிந்தி மட்டும் சென்று பிறமொழி திரைப்படங்களிலும் நடித்துவரும் நிலையில் தற்போது கன்னட சினிமாவில் துர்வா சர்ஜா நடித்துள்ள கேடி தி டெவில் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சியில் நடைபெற்ற நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் ஹிந்தி தவிர தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளேன். ஆனால் மலையாள சினிமாவில் மட்டும் நடித்ததில்லை. எனக்கு மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு மலையாள சினிமா மிகவும் பிடிக்கும். இந்த துறைகயை கையாளும் விதத்தை பார்த்து நான் மிகவும் வியப்படைந்தேன். மலையாள படங்களில் நடித்தால் என்னுடைய கேரக்டருக்கு நியாயம் செய்ய முடியுமா. என நினைக்கிறேன். நடிகர் மோகன்லால் ஒரு அற்புதமான நடிகர். மேலும் எதிர்காலத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்றார்.